BREAKING NEWS: ஸ்டெர்லைட் விவகாரம் :உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்!

Published by
Venu

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதற்கு எதிராக ஆலை நிர்வாகம் மனுதாக்கல் செய்தால் தமிழக அரசின் வாதங்களை கேட்டபின் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

வேதாந்தா  நிறுவனம் மேல்முறையீடு செய்யும் என தகவல் வெளியானதால் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த மே 28 ஆம் தேதி  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்தது:

பசுமைத் தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றவில்லை.மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் தண்ணீர் விநியோகமும் நிறுத்தம்.-ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டார் .இந்த உத்தரவை எதிர்த்து, செய்த மேல்முறையீட்டில் அன்று ஆலையை இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. ல் ஆலையை இயக்குவதற்கான இசைவாணையை வழங்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்தது. அன்று முதல் ஆலைக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

எனவே தூத்துக்குடி மாவட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

இதன் பின்னர்  தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர் .ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது.

இதேபோல்  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தரப்பட்ட நிலத்தை ரத்து செய்தது தமிழக அரசு. ஸ்டெர்லைட்டின் 2வது யூனிட்டுக்காக சிப்காட் ஒதுக்கிய நிலம் ரத்து செய்யப்பட்டது.பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக நிலம் ஒதுக்கீடு ரத்து என்று சிப்காட் நிர்வாகம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…

4 hours ago

100 நாள் வேலைத் திட்டம் ஊதிய நிலுவைத் தொகை : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…

5 hours ago

பொங்கல் திருநாள் : த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…

5 hours ago

“பின் வாங்குற பழக்கம் இல்லை “.. இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்த தனுஷ்!

சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…

6 hours ago

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…

6 hours ago

H1B விசா கொள்கையில் மாற்றம் வருமா? கலகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.!

நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…

7 hours ago