BREAKING NEWS: மெரினாவில் இடம் ஒதுக்காததற்கு மத்திய அரசே காரணம் -தமிழக அரசு

Default Image

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு மீதான  விசாரணை தொடங்கியது.சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது இதனிடையில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய என்ன சட்ட சிக்கல் என்பதை தமிழக அரசு தெளிவு படுத்தவேண்டும் என்றும் இன்று காலை 8 மணிக்கு இதுகுறித்து விசாரணை நடைபெறும் என்று ஒத்திவைத்தனர் .
தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளனர் இதில் அவர்கள் கூறியிருப்பது மத்திய அரசின் சில விதிமுறைகளே காரணம் அதற்க்கு உட்பட்டே காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது  என்று தங்களது பதில் மனுவில் தெரிவித்துள்ளனர்.  இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்