BREAKING NEWS: தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்!துப்பாக்கிச்சூடு நடந்ததா என்பது குறித்து விசாரணை! டிஜிபி ராஜேந்திரன்

Published by
Venu

தூத்துக்குடியில் நிலையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் போலீஸார் அனுப்பப்பட்டுள்ளனர் என்று  டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதேபோல தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் போலீஸ் வேனை கவிழ்த்ததோடு, போலீஸ் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் வணிக வளாகங்களின் கண்ணாடிகளில் சேதம் ஏற்பட்டது. அதேபோல போராட்டக்காரர்கள் மீது போலீசாரும் தடியடி நடத்தினர். தொடர்ச்சியாக பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடியில் துரத்தியதால் போலீஸ் ஓட்டம் பிடித்தனர். காவல்துறையினர் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீஸ் கண்ணீர் புகை வீசியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காவல்துறையினர் – போராட்டக்காரர்கள் இடையே ஸ்டெர்லைட் போராட்டத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். தற்போது மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸார் சுட்டதில் பலியானோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.இதில் 15 பேர் படுகாயம் என தகவல் வெளியாகியுள்ளது.

சற்று முன்  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து முதலமைச்சர் பழனிசாமி காவல் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.இந்த ஆலோசனையில் டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆலோசனை நிறைவு பெற்று பின் டிஜிபி ராஜேந்திரன் கூறியது, போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். துப்பாக்கிச்சூடு நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.மேலும்  தூத்துக்குடியில் நிலையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் போலீஸார் அனுப்பப்பட்டுள்ளனர் என்று  டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்! நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்! நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…

55 minutes ago

தமிழ்நாட்டுக்கே பெருமை!! அஜித் செய்த அந்த நெகிழ்ச்சி செயல்….

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…

1 hour ago

Live: போகிப் பண்டிகை முதல்… கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் வரை!

சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…

2 hours ago

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…

3 hours ago

வடம் இழுத்த அண்ணாமலை… அறுந்த கயிறு… பாய்ந்து பிடித்த பாதுகாவலர்கள்!

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…

3 hours ago

வாகை சூடிய அஜித்துக்கு பொழியும் வாழ்த்து மழை! பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை.!

சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…

4 hours ago