BREAKING NEWS: தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!மாவட்ட நிர்வாகம் அதிரடி
தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை:
இந்நிலையில் தற்போது தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நேற்று வன்முறை ஏற்பட்ட நிலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி காலை 8 மணி வரை 144 தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டத்தில் 144 தடை உத்தரவு 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேம்பார், குளத்தூர்,ஆறுமுகமங்களம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம்,எப்போதும் வென்றான் ஊர்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் பொதுக்கூட்டம் நடத்த, மிதிவண்டி, இருசக்கர வாகனம், நாங்கு சக்கர வாகன பேரணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் தூத்துக்குடியில் 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.21.05.2018 இரவு 10.00 மணி முதல் 23.05.2018 காலை 08.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.