BREAKING NEWS: தூத்துக்குடியில் பேருந்துகள் இயக்கம்…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பேருந்து சேவை நிறுத்த பட்டு வந்த சூழ்நிலையில் தற்போது பேருந்துகள் இயங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட, கூடுதல் தலைமை செயலாளர் டபிள்யூ.சி.டேவிட்தார், முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆகியோரை கண்காணிப்பு அலுவலர்களாக அரசு நியமித்துள்ளது.
தூத்துக்குடிக்கு நேற்று காலை வந்த இருவரும், ஆட்சியர் அலுவலகத்தில், ஏடிஜிபி விஜயகுமார், ஐஜி சைலேஸ் யாதவ், உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ககன்தீப் சிங் பேடி சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, டிஐஜி, விருதுநகர் எஸ்பி ஆகியோருடன் ஆலோசித்தார்.
இந்த நிலையில் நேற்று மருந்து போன்ற அத்யவாசிய பொருட்களின் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று தூத்துக்குடி போலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம் பொதுமக்களின் அச்சத்தை போக்க அரசு அதிகாரிகள்,போலீசார் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்