ஜாக்டோ ஜியோ ஒருங்கினைப்பளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் திரு.தாஸ் ,திரு கேபி,திரு சுப்புரமணியன் ,ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
1.கடந்த (8.5.18) அன்று நடைபெற்ற கோட்டை முற்றுகை போராட்டத்தில் மிக எழுச்ச்யுடன் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
2.கோட்டை முற்றுகை போராட்டத்திற்கு தங்களது ஆதரவை நல்கிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
3. ஜாக்டோ ஜியோ (8.5.18) கோட்டை முற்றுகை போராட்டத்தை தடுப்பதற்காக தலைமை செயலகத்தை சுற்றி முள்வேலி அமைத்து மனித உரிமைகளை மீறிய தமிழக அரசிற்கு ஜாக்டோ ஜியோ கண்டனம் தெரிவித்துகொள்கிறது.
4. (8.5.18) ஜாக்டோ ஜியோ கோட்டை முற்றுகை போராட்டத்தின் போது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.
5.ஜாக்டோ ஜியோ 5 வது கோரிக்கையாக தமிழக அரசு அரசானை 56 ல் வெளியிட்ட பணியாளர்கள் பகுப்பாய்வு குழுவினை ரத்து செய்யப்பட வேண்டும் . இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்க கூடிய மேலும் பள்ளி கல்வி துறை மூலமாக வெளியிட்டுள்ள அரசானை 100 மற்றும் 101 மூலமாக ஒழிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களை காத்திடவும் அரசு பள்ளிகளை மூடுவதை தடுத்திடவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் .
6. ஜாக்டோ ஜியோ வின் ஒருங்கினைப்பளர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் வரும் 11.06.18 முதல் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது என்றும் 11.06.18 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் முடியும் வரை மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தினந்தோறும் ஆர்பாட்டம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட்…