கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை ரசிகர்களிடையே காலா படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்த ரஜினிகாந்த் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரின் பேச்சு காலா படத்திற்கான எதிர்பார்ப்பை இருமடங்காக்கியது.
இன்று படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது சமூக விரோதி என்ற ரஜினிகாந்த் மீது வழக்கு பதிய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் சிலம்பரசன். போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என ரஜினி கூறியதற்கு ஓசூரை சேர்ந்த சிலம்பரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட்வர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் சமூக விரோதிகள் தான் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் என பேட்டியளித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு பல தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…