BREAKING NEWS:ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது குறித்து மத்தியஅரசு பதில் அளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

Published by
Venu

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது குறித்து மத்தியஅரசு பதில் அளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிகளை நிறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆவது பிரிவு அனுமதி பெற்ற இடத்தில் தொடங்கவில்லை என்று கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை 4 மாதத்திற்குள் நடத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது குறித்து மத்தியஅரசு பதில் அளிக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.பேராசிரியை பாத்திமா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ஐஸ்ட் மிஸ்! பெரிய காயத்தில் இருந்து தப்பிய ரஷித் கான்!

ஐஸ்ட் மிஸ்! பெரிய காயத்தில் இருந்து தப்பிய ரஷித் கான்!

சார்ஜா : வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், தலையில்…

7 hours ago

ப்ரோமோஷன் பிச்சிக்கப் போகுது! ‘Free Fire’ கேம் உடன் புஷ்பா-2 படக்குழு ஒப்பந்தம்!

சென்னை : புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படம் வெளியாக…

9 hours ago

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (11-11-2024) காலை 0830…

10 hours ago

மணிப்பூர் : பாதுகாப்புப் படையினரால் 11 பேர் சுட்டுக் கொலை!

மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. அசாமின் எல்லையோர மாவட்டத்தில் குக்கி தீவிரவாதிகள்…

10 hours ago

சிக்கலை தீர்க்கும் சிங்கார வேலன்.. வேல் வாங்கும் போது முருகனுக்கு வியர்க்கும் அதிசயம் ?.

சென்னை -சிக்கல் சிங்கார வேலன் கோவிலின் சிறப்புகளையும் அதிசயங்களையும் இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம். ஆலயம் அமைந்துள்ள இடம்…

11 hours ago

“I LOVE Wayanad” அதுக்கு நீங்க தான் காரணம்..வயநாடு மக்களை புகழ்ந்து பேசிய ராகுல் காந்தி!

கேரளா : வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரி…

13 hours ago