தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கான அனுமதியை திரும்பப் பெற்றது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆவது யூனிட் கட்டுமான பணி மேற்கொள்ள 2016இல் தரப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்றது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.
முன்னதாக தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.இதனால் தூத்துக்குடி நகரமே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 48 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர் .ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…