BREAKING NEWS:ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பான அரசாணை சட்டப்படி செல்லும்! சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே அரசாணை!முதலமைச்சர் பழனிசாமி

Published by
Venu

பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கை:

ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பான அரசாணை சட்டப்படி செல்லும் என்று  பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.  சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே அரசாணை வெளியிடப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கையில், போராட்டக்குழுவினருடன் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சேர்ந்ததால் பிரச்சனையில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். கண்ணீர் புகைகுண்டு, தடியடிக்கும் கலைந்து செல்லாத காரணத்தினால் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

அமைச்சர்கள் நேரில் சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

தூத்துக்குடி கலவரத்தின் போது அரசு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை பேரவையில் காட்டி பேசினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடைபெற்ற புகைப்படங்களை முதலமைச்சர் காட்டினார்.மேலும் அவர் கூறுகையில், திமுக ஆட்சியில்தான் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது..போராட்டத்திற்கு திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன் காரணம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக புகைப்படங்களை காட்டி முதலமைச்சர் பேசியுள்ளார்.144 தடை உத்தரவை மீறி திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி சம்பவத்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகளின் தூண்டுதலே காரணம் என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சில விஷமிகளும் சேர்ந்துவிட்டனர். இவ்வாறு தனது அறிக்கையில் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

3 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

6 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

11 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

31 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

31 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

44 mins ago