ஆலை தற்போது பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, உற்பத்தியில் எந்த பாதிப்பும் கிடையாது என்று ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ ராம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ஆலை தற்போது பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, உற்பத்தியில் எந்த பாதிப்பும் கிடையாது என்று ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ ராம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை 5 நிபந்தனைகளை முன்வைத்து தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது என்றும் சிஇஓ ராம்நாத் கூறியுள்ளார்.
5 நிபந்தனைகளும் ஏற்புடையது அல்ல, இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளோம் என்றும் சிஇஓ ராம்நாத் கூறியுள்ளார்.சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்று சட்ட, ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினர் என்று ஸ்டெர்லைட் சிஇஓ ராம்நாத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…