ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கப்படாது என்பதை அரசாணையாக வெளியிட்டால் மட்டுமே பிரதே பரிசோதனை செய்ய ஒப்புதலளிப்போம் என துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரது குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நிபந்தனை விதித்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில், கிளாட்சன், ஜான்சி, அந்தோனி செல்வராஜ், ரஞ்சித் குமார், மணிராஜ் உள்ளிட்ட 6 பேரது உடல்கள் மட்டும், அவர்களது குடும்பத்தினர் ஒப்புதல் அளிக்காததால் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த 6 பேரது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அமைதிப்பேச்சு வார்த்தை நடத்தினார்.
நர்பார்ட் தாமஸ் தலைமையிலான குழுவினர் துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரது குடும்பத்தினர் சார்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கப்படாது என்பதை அரசாணையாக வெளியிட்டால் மட்டுமே 6 பேரது உடல்களையும் பிரேத பரிசோதனை செய்ய ஒப்புக் கொள்வோம் என அவர்கள் கூறினர்.
மேலும், திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜான்சி என்ற பெண் எட்டடி தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து தனியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், கைது செய்யப் படுவோரை சட்டவிரோதமாக காவலில் வைப்பது போன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை முடக்கும் அனைத்து நடவடிக்கைகளும் முதலமைச்சரின் ஆணைப்படியே எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். எனவே, இதற்கென தனியாக அரசாணை பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை இயக்க இனி அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்பதால், அனைவரும் அமைதி திரும்ப ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
பேச்சுவார்த்தையில் 6 பேரது குடும்பத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துக் கூறப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடியில் தற்போது இயல்புநிலை திரும்பி வருவதாகவும் ஆட்சியர் கூறினார்.
இதனிடையே, தூத்துக்குடி கவலரம் தொடர்பாக இதுவரை 145 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் எனவும், இணைய சேவை முடக்கத்தை திரும்ப பெறுவது குறித்து அரசே முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…