போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். தற்போது மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதேபோல தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் போலீஸ் வேனை கவிழ்த்ததோடு, போலீஸ் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் வணிக வளாகங்களின் கண்ணாடிகளில் சேதம் ஏற்பட்டது. அதேபோல போராட்டக்காரர்கள் மீது போலீசாரும் தடியடி நடத்தினர். தொடர்ச்சியாக பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடியில் துரத்தியதால் போலீஸ் ஓட்டம் பிடித்தனர். காவல்துறையினர் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீஸ் கண்ணீர் புகை வீசியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காவல்துறையினர் – போராட்டக்காரர்கள் இடையே ஸ்டெர்லைட் போராட்டத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். தற்போது மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸார் சுட்டதில் பலியானோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.இதில் 15 பேர் படுகாயம் என தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…
சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…