BREAKING NEWS:மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைதான நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி! விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைதான நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம்
பேராசிரியை நிர்மலாதேவி ,மாணவிகளை தவறாக திசை திருப்ப முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி, ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமீன் மனு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த 11ந்தேதி நிராகரிக்கப்பட்டது. பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் மகாலிங்கம் இரண்டாவது முறையாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மதுரை காமராஜர் பல்கலைகழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பச்சாமி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற்றது.அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம்.பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு 2வது முறையாக தள்ளுபடி செய்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.