BREAKING NEWS:பேஸ்புக்,ட்விட்டர் உட்பட அனைத்தும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் முடக்கம்!தமிழக அரசு அதிரடி

Published by
Venu

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

 

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்.

இன்று  தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே  மோதல் நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தினர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பத்தை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள பிரையன்ட் நகரில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்கபட்டது.

தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்றது.பொதுமக்கள் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து காவல்துறையினர் ரப்பர் குண்டு வீசினர்.அண்ணாநகர் பகுதியில் திடீரென பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடியில் காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார்.4 பேர் படுகாயம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது என்று  தமிழக உள்துறை தெரிவித்துள்ளது.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

பரந்தூர் வந்த த.வெ.க தலைவர் விஜய்! விவசாயிகள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…

29 minutes ago

“உங்கள் காலடி மண்ணை தொட்டு.,” தவெக தலைவர் விஜயின் ஆவேசமான முழு பேச்சு இதோ….

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…

52 minutes ago

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை : எடப்பாடி ஏன் அவசரப்படுகிறார்? அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி!

சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…

60 minutes ago

அது வேற மக்கள்..இது வேற மக்களா? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சென்னை :  பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

1 hour ago

பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்! உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்…

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

2 hours ago

பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்! வாங்கிய பரிசுகள் என்னென்ன தெரியுமா?

சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…

2 hours ago