BREAKING NEWS:பெங்களூரிலிருந்து டெல்லிக்கு மாற்றக்கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்சநீதிமன்றம்!
உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு விவரம்:
மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு இல்லை என்றும் மத்திய அரசின் வரைவு அறிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.வரைவு செயல் திட்டத்தை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். பருவகாலத்திற்கு முன்னதாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவுத்திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்.மேலும் காவிரி ஆணைய தலைமையகம் டெல்லியில் அமையும் என்றும் தெரிவித்துள்ளது. ஆணையத்துக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பெங்களூரிலிருந்து டெல்லிக்கு மாற்றக்கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்சநீதிமன்றம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.