பி.இ ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது .
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைனில் விண்ணப்பம்:
2018-19-ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தல், கலந்தாய்வு, சான்றுகள் சரிபார்த்தல், இடங்கள் ஒதுக்கீடு அனைத்தும் ஆன்லைன் மூலமே நடைபெறும் என்று அரசு அறிவித்தது. பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைனில் விண்ணப்பம் இதனிடையே அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு கடந்த மே 3ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் மே 30-ம் தேதி வரை பதிவு செய்யலாம். ஆன்லைன் பதிவு முடிந்தவுடன் ஜூலை மாத முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆரம்பமாக உள்ளது. இந்த ஆண்டு சான்றுதல் சரிபார்ப்பு, கலந்தாய்வு என அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விவரம்:
இந்த நடைமுறையால் கணினி வசதி மற்றும் இணையதள தெளிவு இல்லாத ஏழை கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பை இழக்க நேரிடும் என்று காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.ஆன்லைன் மட்டுமல்லாமல் ஆப்லைனிலும் விண்ணப்பங்களைப் பெற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரி உள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் வி.பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் கடந்த மே 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.அப்போது கிராமப்புற மாணவர்களால் ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த முடியும் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.தமிழகத்தில் கிராமங்களை சேர்ந்த பலர் வங்கி கணக்கு இல்லாமல் இருக்கின்றனர். அவ்வாறு வங்கி கணக்கு இல்லாத மாணவர்களின் பெற்றோர் டெபிட் கார்டு, கிரிடிட் கார்டை பயன்படுத்தி விண்ணப்ப தொகையை எப்படி செலுத்த முடியும். இதற்கு மாற்று நடவடிக்கையாக விண்ணப்ப தொகையை நேரடியாகவோ அல்லது வரைவோலையாகவோ செலுத்த அனுமதிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர். கட்டணம் செலுத்துவது மற்றும் தமிழில் விண்ணப்பிப்பது தொடர்பான அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாட்டை அன்று(மே 10) பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். டி.டி. மூலம் கட்டணம் செலுத்தலாம் இந்த வழக்கு கடந்த மே 10 ஆம் தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விண்ணப்ப கட்டணத்தை வரைவோலையாகவும் செலுத்தலாம் என்றும், அதை உதவி மையங்களில் கொடுக்கலாம் என்றும் தெரிவித்தார். 42 உதவி மையங்களில் விண்ணப்பிக்க வரும் மாணவர்களுக்கு வழிகாட்ட போதுமான ஆட்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு உதவி மையத்திலும் இருவரே உள்ளதாகவும் , கிராமப்புற மாணவர்களுக்கு அங்கு சரியான வழிக்காட்டுதல் இல்லை என்றும் மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றம் மறுப்பு:
இதையடுத்து தற்போது பி.இ ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது .மேலும் நேரடி விண்ணப்ப நடைமுறையை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…