BREAKING NEWS:பிளஸ் 1 பொதுத்தேர்வில் 188 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி!

Published by
Venu

இன்று  காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதில்  மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. தேர்ச்சி விகிதம் 97.3% ஆகும்.

1. ஈரோடு -97.3%

2.திருப்பூர் 96.4% பேர்

3.கோவை 96.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 188 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

 

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடியதேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago