BREAKING NEWS:பள்ளிகளின் அடிப்படையில் எந்த பள்ளி தேர்ச்சி விகிதத்தில் டாப்?

Default Image

இன்று  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது .கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த தேர்வை 10 லட்சத்து, ஆயிரத்து 140 பேர் எழுதி உள்ளனர்.

தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுதவிர மாணவர்கள் படித்த பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்ப படும் என்றும்,இன்றே மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்வு முடிவுகளை WWW.dge.tn.nic.in WWW.dge.tn.gov.inஆகிய இணையதளங்களிலும் பார்க்கலாம் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி:

இதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் , மாணவர்கள் தேர்ச்சி:

தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியது.இதனை  அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.தேர்வெழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.5 %,இதில் மாணவிகள் – 96.4 %, மாணவர்கள்- 92.5 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஜூன் 28ஆம் தேதி மறுத் தேர்வு:

ஜூன் 28ஆம் தேதி மறுத் தேர்வு எழுதலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்க உதவி தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் 98.5% தேர்ச்சியுடன் 10 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம்:

 

சிவகங்கை, 98.5%

ஈரோடு 98.38%

விருதுநகர் 98.26%

மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது.

1687 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி:

பத்தாம் வகுப்பு தேர்வில் 1687 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன.மொத்தம் 5456 அரசு பள்ளிகள் தேர்வு எழுதியுள்ளது.

பத்தாம் வகுப்பு போதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் :

பத்தாம் வகுப்பு போதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 481 க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 9402 ஆகும்.இதில் 2795 மாணவர்களும்,6607 மாணவிகளும் அடங்குவார்கள்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பாடவாரியான தேர்ச்சி விவரங்கள்:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பாடவாரியாக  தேர்ச்சி பெற்ற மாணவர்களின்  விவரம்.

மொழிப்பாடம் – 96.42 %

ஆங்கிலம் – 96.50 %

கணிதம் – 96.18 %

அறிவியல் – 98.47 %

சமூக அறிவியல் – 96.75 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மொழிப்பாடத்தில் மாணவர்கள் 94.82%, மாணவிகளும் 98.01 % , ஆங்கிலம் பாடத்தில்  மாணவர்கள் 95.03 %,மாணவிகளும் 97.97 %,கணித பாடத்தில்  மாணவர்கள் 94.98 %, மாணவிகளும் 97.38 %,அறிவியல் பாடத்தில்  மாணவர்கள் 97.77 % மாணவிகளும் 99.17 %,சமூக அறிவியல் பாடத்தில்  மாணவர்கள் 95.58 %, மாணவிகளும் 97.91 %  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

பள்ளிகளின் அடிப்படையில் தேர்ச்சி விகிதம்:

பத்தாம் வகுப்பு  பள்ளிகளின் அடிப்படையில் தேர்ச்சி விகிதங்கள்.அரசு பள்ளிகள் 91.36%,அரசு உதவி பெரும் பள்ளிகள் 94.36%,மெட்ரிக் பள்ளிகள்  98.79%,இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 94.81 %,பெண்கள் பள்ளி 96.27%,ஆண்கள் பள்ளி 87.54 % ஆகியோர் பள்ளிகளின் அடிப்படையில் தேர்ச்சி  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனிடையே கல்வி வழிகாட்டிக்காகவும், உளவியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் 104 என்ற எண்ணை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்