BREAKING NEWS:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி !
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இன்று தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது .கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த தேர்வை 10 லட்சத்து, ஆயிரத்து 140 பேர் எழுதி உள்ளனர்.
தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுதவிர மாணவர்கள் படித்த பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்ப படும் என்றும்,இன்றே மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்வு முடிவுகளை WWW.dge.tn.nic.in WWW.dge.tn.gov.inஆகிய இணையதளங்களிலும் பார்க்கலாம் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கல்வி வழிகாட்டிக்காகவும், உளவியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் 104 என்ற எண்ணை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.