BREAKING NEWS:தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம்!கலக்கத்தில் இணைய தளவாசிகள்

Default Image

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம் என்று  தமிழக உள்துறை அறிவித்துள்ளது.

 

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் நேற்று  ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர்.

இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர்.

இன்று  தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே  மோதல் நடைபெற்றது.

 

இந்நிலையில் இன்று  துப்பாக்கிச்சூடு சம்பத்தை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள பிரையன்ட் நகரில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்கபட்டது.

தூத்துக்குடியில் அண்ணாநகரில் காவல்துறையினர்- பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல் நடைபெற்றது.

இதேபோல்  தூத்துக்குடியில் காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார்.4 பேர் படுகாயம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

Image result for facebook whatsapp instagram

இந்நிலையில் தற்போது போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கம் என்று  தமிழக உள்துறை அறிவித்துள்ளது .

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital
Gold Price today
Sri lanka President Anura kumara Dissanayake