தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கடந்த மே 27 ஆம் தேதி மீனவர்களின் நிபந்தனையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு, வன்முறை சம்பவங்களில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் நீதிபதிகள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 7 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6 பேரின் உடல்கள் இன்னும் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது .அரசு மருத்துவர், ஒரு தடயவியல் மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது .இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்தது.மேலும் ஒருவாரத்துக்கு 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதிட்ட நிலையில் உத்தரவிட்டது. தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேதப் பரிசோதனை செய்தால் தடயங்கள் அழிக்கப்படும் என்று வழக்கறிஞர் சங்கரசுப்பு திட்டவட்டமாக தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில், பிரேத பரிசோதனை செய்த உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்த பின் உடலை கேட்டால் உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.7 பேரின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…