BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மேலும் ஒருவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த செல்வசேகரன் என்பவரது உடல் மறு பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்த சண்முகம் என்பவரது உடல் மறுபிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 7பேரின் உடல் மறுபிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாந்த் பத்ரா அடங்கிய மருத்துவர்கள் குழு மறுபிரேத பரிசோதனை செய்தது.
கடந்த மே 28 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்தது:
பசுமைத் தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றவில்லை.மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் தண்ணீர் விநியோகமும் நிறுத்தம்.-ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டார் .இந்த உத்தரவை எதிர்த்து, செய்த மேல்முறையீட்டில் அன்று ஆலையை இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. ல் ஆலையை இயக்குவதற்கான இசைவாணையை வழங்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்தது. அன்று முதல் ஆலைக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
எனவே தூத்துக்குடி மாவட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில், பிரேத பரிசோதனை செய்த உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்த பின் உடலை கேட்டால் உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.