BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஒருவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்த சண்முகம் என்பவரது உடல் மறுபிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 7பேரின் உடல் மறுபிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாந்த் பத்ரா அடங்கிய மருத்துவர்கள் குழு மறுபிரேத பரிசோதனை செய்தது.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில், பிரேத பரிசோதனை செய்த உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்த பின் உடலை கேட்டால் உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியது:
இன்று மாலைக்குள் 7 பேரின் உடலையும் மறு பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.மறு பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவர் இன்று மதியம் தூத்துக்குடி வரவுள்ளார் என்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.மேலும் 2 தமிழக அரசு மருத்துவர்களுடன் ஜிப்மர் மருத்துவர் மறுபிரேத பரிசோதனை செய்யவுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.