BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 27 ஆம் தேதி மீனவர்களின் நிபந்தனையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு, வன்முறை சம்பவங்களில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் நீதிபதிகள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 7 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6 பேரின் உடல்கள் இன்னும் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது .அரசு மருத்துவர், ஒரு தடயவியல் மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் .தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில், பிரேத பரிசோதனை செய்த உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.