BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று காலை தூத்துக்குடி சென்று வந்த நிலையில், துணை முதல்வர், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் முதல்வர் ஈடுபட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் நாளை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவுள்ளது குறித்து, துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.
இதேபோல் இன்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தூத்துக்குடியில் பேசியதாவது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நெஞ்சை உருக்கும் சம்பவமாக அமைந்துவிட்டது என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் காயமடைந்த 47 பேரை சந்தித்து ஆறுதல் கூறினோம்.சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் நலம் பெற்று திரும்புவார்கள் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.