BREAKING NEWS:தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறும்படி போலீசார் எச்சரிக்கை!

Published by
Venu

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் காயமடைந்தோரின் உறவினர்கள் மட்டும் தங்க அனுமதி அளித்துள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

3 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

3 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

3 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

3 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

4 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

4 hours ago