BREAKING NEWS:தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!

Published by
Venu

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து முதலமைச்சர் பழனிசாமி காவல் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதேபோல தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள்- காவல்துறை இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் போலீஸ் வேனை கவிழ்த்ததோடு, போலீஸ் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

 

போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் வணிக வளாகங்களின் கண்ணாடிகளில் சேதம் ஏற்பட்டது. அதேபோல போராட்டக்காரர்கள் மீது போலீசாரும் தடியடி நடத்தினர். தொடர்ச்சியாக பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடியில் துரத்தியதால் போலீஸ் ஓட்டம் பிடித்தனர். காவல்துறையினர் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீஸ் கண்ணீர் புகை வீசியது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தனர்.தடுத்து நிறுத்திய போலீசாரை விரட்டி விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் .ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து முதலமைச்சர் பழனிசாமி காவல் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இந்த ஆலோசனையில்  டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை ஈடுபட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Recent Posts

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

6 hours ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

7 hours ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

7 hours ago

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

8 hours ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

8 hours ago

“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல” முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…

8 hours ago