BREAKING NEWS:தூத்துக்குடியில் போரட்டத்தில் ஈடுபட்டதாக 78 பேர் கைது..!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன் தினம் போராட்டங்கள் தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறை வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீவைத்தும் கொளுத்தப்பட்டன. நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக பலரை போலீசார் கைது செய்தனர்.
இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்
இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் போரட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 78 பேரை கைது செய்யதுள்ளது காவல்துறை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்