BREAKING NEWS:தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடக்கம்!
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது. சிபிசிஐடி டி.எஸ்.பி. பிரவீன்குமார் மேற்பார்வையில் 20 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய குழு விசாரணையில் ஈடுபட்டுள்ளது.தென்பாகம், வடபாகம், சிப்காட் காவல்நிலையங்களில் வழக்குகள் தொடர்பான கோப்புகளை பெற்று விசாரணை நடைபெறுகிறது.
முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மே 29 ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.தூத்துக்குடி போலீசார் வழக்கை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.