BREAKING NEWS:தூத்துக்குடியில் இன்று நள்ளிரவு முதல் இணையதள சேவை -ஆட்சியர் சந்தூரி நந்தீப்..!!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று நள்ளிரவு முதல் இணையதள சேவை வழங்கப்படும் என ஆட்சியர் சந்தூரி நந்தீப் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் இணையதள சேவை முடக்கப்பட்டது. ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரியில் இணையதள சேவை தொடங்கியுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதள சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்