தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று கமல் சந்தித்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்ற நிலையில் கமல் 20 பேருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இன்று காலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரே மாற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான் என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேரில் சென்ற கமல்ஹாசன் காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது, காயமடைந்தவர்களின் உறவினர்கள் கமல்ஹாசனின் கண்ணீர் விட்டுக் கதறியபோது, கமலும் கண் கலங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், யாரையோ திருப்திபடுத்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாகவும், அம்பு எய்தவர்களை கண்டறிய வேண்டும் என்றும் கோரினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…