திருவள்ளூர் புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் 2வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகன், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 22 பேர் இந்த உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்னிறுத்தினர்.பின்னர் உண்ணாவிரதத்தை இன்று மதியத்துடன் முடித்து கொள்வதாக அறிவித்தனர்.
தற்போது உடல்நலக் குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் வேல்முருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…