BREAKING NEWS:தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ‘காலா’ படத்திற்காக சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி!தமிழக அரசு

Default Image

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ‘காலா’ படத்திற்காக நாளை முதல் வரும் 10ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.

ரஜினி நடித்துள்ள காலா படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கை ஏற்க முகாந்திரம் இல்லை எனக்கூறி ராஜசேகரன் மனுவை தள்ளுபடி செய்தது.காலாவுக்கு தடைகோரி ராஜசேகரன் தொடர்ந்த மனு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை ரசிகர்களிடையே காலா படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்