BREAKING NEWS:சுங்கச்சாவடி வழக்கில் கைதான தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு!

Published by
Venu

கடந்த மே 26 ஆம் தேதி  உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக  வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது, சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் 11பேரை கைது  செய்தனர். வேல்முருகன் உள்ளிட்ட 3 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் மே 25 ஆம் தேதி  இரவு தூத்துக்குடி சென்ற வேல்முருகனை அங்குள்ள போலீசார் கைது செய்து உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் ஓப்படைத்தனர். இதையடுத்து அவர் கடந்த மே 26 ஆம் தேதி காலை திருக்கோவிலூர் முதலாவது குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, வேல்முருகன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது சுங்கச்சாவடியை தாக்கிய வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நலக்கோறால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேல்முருகன் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள வேல்முருகனை தேசத் துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர் .124ஏ,153, 153ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வேல்முருகன் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

30 minutes ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

36 minutes ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

56 minutes ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

2 hours ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

2 hours ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

3 hours ago