BREAKING NEWS:சுங்கச்சாவடி வழக்கில் கைதான தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு!
கடந்த மே 26 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது, சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் 11பேரை கைது செய்தனர். வேல்முருகன் உள்ளிட்ட 3 பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில் மே 25 ஆம் தேதி இரவு தூத்துக்குடி சென்ற வேல்முருகனை அங்குள்ள போலீசார் கைது செய்து உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் ஓப்படைத்தனர். இதையடுத்து அவர் கடந்த மே 26 ஆம் தேதி காலை திருக்கோவிலூர் முதலாவது குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, வேல்முருகன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது சுங்கச்சாவடியை தாக்கிய வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நலக்கோறால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேல்முருகன் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் உள்ள வேல்முருகனை தேசத் துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர் .124ஏ,153, 153ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வேல்முருகன் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.