BREAKING NEWS:குட்கா முறைகேடு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
உச்சநீதிமன்றம் இன்று,குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை அறிவித்தது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி, திமுக எம்.ல்.ஏ. ஜெ.அன்பழகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், குட்கா உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும், அதனால், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த மே 14ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கலாமா என்பது குறித்து இன்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு உத்தரவிட்டுள்ளது.மேலும் குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்றும் தெரிவித்துள்ளது.குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தி சிவகுமார் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.