BREAKING NEWS:கடும் வீழ்ச்சி அடைந்த ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா பங்குகள்!10 மாதங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி
10 மாதங்களில் இல்லாத அளவிற்கு,ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவன பங்குகள், விலை வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எதிரொலியாகவே, வேதாந்தா நிறுவன பங்குகள் விலை வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கின்றன.
இன்று காலையில், வர்த்தகம் தொடங்கியபோது, 258 ரூபாய் 75 காசுகளாக இருந்த வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள், காலை 11.16 மணி நிலவரப்படி, 255 ரூபாயாக சரிந்தது. இந்த விலை வீழ்ச்சி மேலும் தொடரவே வாய்ப்பிருப்பதாக, பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.