BREAKING NEWS:உடல்களை பதப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!!

Published by
kavitha

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் உடல்களை பதப்படுத்தும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. உடல்களை பாதுகாக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்ய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. உடல்களை ஒப்படைக்குமாறு கேட்டு உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அரசு கூறியுள்ளது. உறவினர் போராட்டம் செய்தால் அரசு எவ்வாறு செயல்படவேண்டும் என விளக்கம் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடைபெறுகிறது. அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களோடுதான் அரசும் உள்ளது. ஆனால் மனுவில் இல்லாத தகவல்களையெல்லாம் வாதங்களாக முன் வைக்கிறார்கள். விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். என்றார்.

நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் கண்டனம்….

வழக்கு கோரிக்கை, அரசின் வாதம் என அனைத்தும் சட்டத்திற்குட்பட்டுதான் இருக்கவேண்டும். நீதிமன்றத்துக்குள் அரசியலை கொண்டு வராதீர்கள். அரசியலை கேட்க இங்கே வரவில்லை. நாங்கள் இங்கே உட்கார்ந்தால் அனைவரையும் சட்டத்தின் பார்வையில்தான் பார்க்கிறோம். நீதிமன்றத்திற்கு வெளியே நடப்பது ஏதும் தெரியாமல் இங்கே உட்காருகிறோம் என நினைக்க வேண்டாம். என நீதிபதிகள் தெரிவித்தனர். நாங்கள் அரசை குற்றம் சாட்டவில்லை. அந்த நோக்குடன் நாங்கள் வரவில்லை. ஆனால் வழக்கு தொடர்பாக மட்டுமே வாதங்களை முன்வைக்க சொல்கிறோம் என்றனர்.

உடற்கூறு ஆய்வு நடந்து முடியட்டும். மறு உத்தரவு வரும் வரை அவர்களின் உடல்களை பதப்படுத்துங்கள். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தவுடன் அதன் தன்மையை பொறுத்து மறு ஆய்வு தேவையா இல்லையா என உத்தரவிடுகிறோம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். சட்ட உதவிகள் வழங்க வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டும். வழக்கு குறித்து தமிழக அரசு நிலை அறிக்கையை தாக்கல்  செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

3 mins ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

41 mins ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

47 mins ago

“பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக நாங்கள் உடைத்துள்ளோம்.!” ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…

53 mins ago

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

2 hours ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

3 hours ago