BREAKING NEWS:அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் நாளை ஆய்வு!ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அதிரடி
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் நிரஞ்சன், பார்த்தசாரதி ஆகியோர் நாளை காலை 10.30 மணிக்கு ஆய்வு செய்கின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் நிரஞ்சன், பார்த்தசாரதி ஆகியோர் நாளை காலை 10.30 மணிக்கு ஆய்வு செய்கின்றனர்.
மேலும் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 2 அறைகளிலும் ஆணையத்தின் வழக்கறிஞர்கள் ஆய்வு நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆணையத்தின் வழக்கறிஞர்களுடன் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செல்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.