BREAKING NEWS:அப்பல்லோ மருத்துவமனையில் மூச்சுத்திணறல்..!! ஏற்பட்டபோது ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவு வெளீயிடு..!!
சென்னை: மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவுகள் ஆறுமுகசாமி ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் ஒப்படைத்தார். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நிலை குறைபாடால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
ஆடியோவில் ஜெ.பேசியது என்ன..?
- ஆடியோ பதிவு உரையாடல் பதிவு செய்வது சரியாக கேட்கிறதா? என்று மருத்துவர் சிவக்குமாரிடம் கேட்கிறார் ஜெயலலிதா
- அதற்கு மருத்துவர் சிவக்குமார் சிறப்பாக இல்லை அப்ளிகேஷன் டவுன்லோடு செய்கிறேன் என்று சொல்கிறார்
- எடுக்க முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார் ஜெயலலிதா
- என்ன வேண்டும் என்று இருவர் கேட்க மூச்சு திணறலோடு ஜெயலலிதா இருமும் ஒலி கேட்கிறது.
- தனக்கு ரத்த அலுத்தம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார் ஜெயலலிதா அதற்கு மருத்துவர் அர்ச்சனா:140/80 இருக்கிறது என்று சொல்கிறார்.
- இது எனக்கு நார்மல் தான் என்கிறார் ஜெ
- அப்பொழுது திரையரங்கில் முதல்வரிசையில் இருக்கும் ரசிகன் விசில் அடிப்பதை போல எனக்கு மூச்சு திணறுகிறது எங்கிறார் ஜெயலலிதா
ஜெயலாலிதா அடிக்கடி இருமிக் கொண்டே பேசுவது ஆடியோவில் பதிவாகியுள்ளது
ஜெயலலிதா பேசிய ஆடியோ இருப்பதாக மருத்துவர் சிவக்குமார் ஆணையத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று ஜெயலலிதா பேசிய ஆடியோவை ஆணையத்தில் அளித்துள்ளார் இதனை ஆணையம் வெளியிட்டுள்ளது மேலும் ஜெயலலிதா கை பட எழுதிய உணவு பட்டியலை இன்று ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்