#Breaking:வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் அந்தமான் அருகே தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலுக்கு சென்று வரும் நவ.15 ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக,குமரிக்கடல்,மன்னர் வளைகுடா,தென்கிழக்கு அரபிக்கடல்,கேரள கடலோரம்,லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும்,கன்னியாக்குமரி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.