நெல்லை சாஃப்டர் பள்ளிக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த விஸ்வரஞ்சன், சதீஷ், அன்பழகன் ஆகிய 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நெல்லை சாஃப்டர் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஞான செல்வி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சாஃப்டர் பள்ளி கட்டிடத்தில் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதால், பள்ளிக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…