நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகன் தனிப்படை போலீசாரால் கைது.
திருநெல்வேலி அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்தது. மங்களூரில் பதுங்கியிருந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டியிருந்தது. கல்குவாரி உரிமையாளர் தலைமறைவாகிய நிலையில், தனிப்படை போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், மங்களூரில் தங்கியிருந்த தனியார் விடுதியில் வைத்து கல்குவாரி உரிமையார் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, சமீபத்தில் நிகழ்ந்த அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர். கல்குவாரி விபத்தில் சிக்கி உள்ள மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…