நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு.
நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். நீட் விலக்கு தொடர்பாக நடைபெற்று வரும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய காட்சிகளை தவிர்த்து, மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற டெல்லி சென்று போராட வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பாக வலியுறுத்தியுள்ளனர். சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கே மீண்டும் அனுப்ப திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை ஆளுநர் செய்யவில்லை என்றும் ஆளுநர் தனது கடமையை செய்யாததால் மீண்டும் அவரிடம் வலியுறுத்தினோம் எனவும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பேசி வருகிறார். நீட் விலக்கு மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் போட்டுவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமலேயே ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…