#BREAKING: நீட் விலக்கு மசோதா பேரவையில் நிறைவேற்றம் – அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கொண்டுவரப்பட்ட மசோதா நிறைவேறிய நிலையில், பாஜக வெளிநடப்பு.
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டன. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக அதிரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. நீட் தேர்வால் பல நன்மைகள் உண்டு என பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில், வெளிநடப்பு செய்தனர். கூட்டணி கட்சியின் முடிவு வேறு எங்களின் முடிவு வேறு என்றும் குறிப்பிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறிய நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.