#BREAKING: நீட் தேர்வு – நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் – முதல்வர் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் பேரவை 110விதியின் கீழ் அறிவிப்பு.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாம் நாளான இன்று றைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 11 இராணுவ வீரர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் துரைமாணிக்கம், புனீத் ராஜ்குமார் ஆகியோர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கேள்வி – பதில் நேரம் நடைபெற்றது. இதன்பின் பேரவை விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கல்வி என்பது அடிப்படை உரிமை. நுழைவுத் தேர்வுகள் விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தை பாதிக்கும். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி சேர்க்கை அமையவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

எந்தவொரு நுழைவுத்தேர்வு என்றாலும், அது ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும். ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதிதான் நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மருத்துவத்துறையில் தமிழகம் நாட்டிற்கே முன்னோடியாக உள்ளது. மாநில அரசிடமிருந்து உரிமையை பறித்துள்ளது மத்திய அரசு. பள்ளிக்கல்வி முறையை அர்த்தமற்றதாக்கிவிட்டது நீட் தேர்வு, இதனை வேடிக்கை பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மாநில நிதியில் கட்டப்படும் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை நீட் தேர்வு பறித்துவிட்டது. நீட் விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்து வருகிறார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் நேரம் கொடுக்கவில்லை. இது மக்களாட்சி மாண்புக்கு எதிரானது. நீட் தேர்வுக்கு எதிரான சமூக நீதிக்கான போராட்டம் தொடரும். போராட்டங்கள் மூலமே வளர்ச்சி பெற்றுள்ளோம். நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Recent Posts

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

35 minutes ago
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

1 hour ago
ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

3 hours ago
ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

17 hours ago
சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

18 hours ago
ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

19 hours ago