சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காததால் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
குடியரசு தலைவருக்கு நீட் விலக்கு மசோதா அனுப்பாததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…