#BREAKING: நீட் விவகாரம் – சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காததால் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
குடியரசு தலைவருக்கு நீட் விலக்கு மசோதா அனுப்பாததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.