#BREAKING: நீட் தேர்வு – அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவு!!
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத கடந்த ஆண்டை விட இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என பள்ளிக்கல்வித்துறை தகவல்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத இதுவரை 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடியும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 9 பேரும் விண்ணப்பித்துள்ளனர். கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஒரு அரசு பள்ளி மாணவர்கள் கூட நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12 ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்து.